2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மின்னொளி மென்பந்து கிரிக்கெட் போட்டியில் அன்டனீஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன், ரீ.எல்.ஜௌபர்கான்


மட்டக்களப்பு புதுநகர் புதிய பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 07ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட மின்னொளி மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.

இப்போட்டியில் மட்டக்களப்பு சின்ன ஊறனி அன்டனீஸ் விளையாட்டுக் கழகமும் அதனை எதிர்த்து மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.

இதில் அன்டனீஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி சுற்றுப் போட்டியின் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

இச்சுற்றுப் போட்டியின் இரண்டாம் இடத்தினை கோட்டமுனை விளையாட்டுக் கழகமும் மூன்றாம் இடத்தினை சென்றல் லைட் விளையாட்டுக் கழகமும் நான்காம் இடத்தினை கல்லாறு விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன.

வெற்றியீட்டிய அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பணப்பரிசும் வழங்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X