2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டு வீரர்களை தெரிவுசெய்யும் பயிற்சி முகாம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


கால்டன்  நிறுவனத்தால், திருகோணமலை மாவட்டத்தின் விளையாட்டு வீரர்களை தெரிவுசெய்யும் பயிற்சி முகாம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லுஸரி மைதானத்தில் நடத்தப்பட்ட இப்பயிற்சி முகாமில் 1,200 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டார்கள். 15 வயது தொடக்கம் 20 வயது வரையான  மாணவர்களின் திறமைகளை அறிந்துகொண்டு அவர்களின் திறன்களை மேலும் அதிகரித்துக்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட், கால்பந்து, கரப்பந்து, வலைப்பந்து, ஹொக்கி ஆகிய விளையாட்டுக்களில் திறமை காட்டும் மாணவர்கைளத்  தெரிவு செய்வதற்காக இது ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒவ்வொரு விளையாட்டிலும் திறமை காட்டிய 20 வீர, வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாகாண மட்டத்தில் மேலதிக பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கால்டன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மல்கம் பெரோ இதற்கான  ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X