2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அம்பாறை அணி வெற்றி

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்

கிழக்கு மாகாண கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பெண்கள் பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை அம்பாறை மாவட்ட அணி பெற்று சம்பியனாகியது.

இளைஞர் விவகாரத் திறன் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இந்தக் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியை நடத்தியது.

ஆண்கள் பிரிவில் முதலாமிடத்தை கிரான் அணியும் இரண்டாமிடத்தை காத்தான்குடியும் பெற்றுக்கொண்டன.

மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை  நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 13 கரப்பந்தாட்ட அணிகள் பங்குகொண்டன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா தலைமையில் இடம்பெற்ற இப்போட்டிகளில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்து   கொண்டார். வெற்றி பெற்ற அணிகளுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X