2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பூநொச்சிமுனை அணிக்கு சம்பியன்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற பி.பி.எல். 20 இற்கு 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பூநொச்சிமுனை அணி 2013ஆம் ஆண்டிற்கான பி.பி.எல். சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒருமாத காலமாய் இடம்பெற்று வந்த இச்சுற்றுத்தொடரில் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 8 பிரபல அணிகள் போட்டியிட்டன.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பூநொச்சிமுனை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்களைப் பெற்றது. அணியின் விக்கெட் காப்பாளர் எம்.நிப்ராஸ் 56 பந்துகளுக்கு 72 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு விளையாடிய காத்தான்குடி கே.கே.வை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்ளைப் பெற்று தோல்வியடைந்தது. பூநொச்சிமுனை அணி 9 ஓட்டங்களால் வெற்றி பெற்று 2013ஆம் ஆண்டிற்கான  சம்பியனாகியது.

ஆட்ட நாயகனாக பூநொச்சிமுனை அணிவீரர் நிப்ராஸ் தெரிவானார். தொடர் ஆட்ட நாயகனாக கே.கே.வை அணிவீரர் கே.கலீல் தெரிவானார்.

சிறந்த துடுப்பாட்ட வீரராக பூநொச்சிமுனை அணிவீரர் கே.ஜீவிதனும் சிறந்த தொடர் பந்துவீச்சாளராக கே.கே.வை அணிவீரர் ஜம்லியும் சிறந்த விக்கட் காப்பாளராக பூநொச்சிமுனை அணிவீரார் நிப்ராசும் தெரிவாகினர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X