2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழகங்களுக்கு நேற்று திங்கட்கிழமை விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் என்பவற்றினுடாக 44 இளைஞர் கழகங்களுக்கு இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி நா.குகேந்திராவின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட பணிமனை கேட்போர் கூடத்தில் இந்த  நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராசா, மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், தேசிய இளைஞர் வேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X