2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை (1) முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விளையாட்டு வீரர்களிடையே சிறந்த சமூக பண்புகளை உருவாக்கவல்ல விளையாட்டுத் துறையினை ஊக்குவிக்கும் வகையில் மேற்படி விளையாட்டு உபகரணங்கள் முதல்வரினால் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது கல்முனை லெஜன்ட் விளையாட்டுக்கழகத்தின் 100ஆவது போட்டித் தொடருக்கான விசேட இலட்சனை மாநகர முதல்வரினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை லெஜன்ட் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X