2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.மாவட்டத்திற்கு முதல் நா0ளிலே இரண்டு தங்கப்பதக்கம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியின் முதல் நாளிலே யாழ்.மாவட்டத்திற்கு 2 தங்கப்பதக்கங்கள்

கல்வி அமைச்சின் சுகாதார, உடற்கல்வி மற்றும் விளையாட்டுக் கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி நேற்று 2 ஆம் திகதி முதல் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

19 வயதுப்பிரிவு பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த தவரட்ணம் டன்சிக்கா 2.60 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்ட அதேவேளை, 21 வயதுப்பிரிவு ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.விமலேந்திரன் தங்கப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டார்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X