2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிரிக்கெட் போட்டியில் மட்டு. செவிப்புலன் வலுவற்றோர் அணி வெற்றி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பில் செவிப்புலன் வலுவற்றோருக்கிடையில் நடைபெற்ற ஆறு ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் அணி வெற்றியீட்டியது.

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 13ஆவது நிறைவையொட்டி மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்றது.

ஆறு ஓவர்களைக் கொண்ட இக்கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கொழும்பு, யாழ்ப்பானம், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த  அணிகள் பங்குபற்றின.

இதில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டன.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை அணி 5 ஓவர்கள் முடிவில் 80 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு அணி 4.4 பந்து வீச்சு ஓவர்களில் 81 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. இதில் மட்டக்களப்பு அணியைச் சேர்ந்த எஸ்.தஸ்மிதன் 31 ஓட்டங்களை பெற்று சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X