2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேசிய மட்ட போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற வீர, வீராங்கனைகள் கௌரவிப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி சார்பாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்கள் நிறவிருதுகள் பெற்ற வீர,
வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நண்பகல் நடைபெற்றது.

கொழும்பு சுகந்ததாஸ விளையாட்டரங்கில் (2) தொடக்கம் (6) வரையில் நடைபெற்ற தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்கள், மற்றும் நிறவிருதுகள் பெற்ற வீர, வீராங்கனைகளே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

மேற்படி போட்டிகளில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூhரிக்கு 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் உட்பட 5 பதக்கங்களும், இரண்டு நிறவிருதுகளும் கிடைத்திருந்தன.

கல்லூரியின் பதில் அதிபர் எஸ்.சயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப்பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன் கலந்துகொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X