2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கரப்பந்தாட்டப்போட்டியில் புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி சம்பியன்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா 

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியினால் நடத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி சம்பியனாகியுள்ளது.

கல்லூரியின் முன்னாள் அதிபர் நவமகாஜனன் சிற்பி அமரர் தெ.து.ஜயரத்தினத்தின் நூறாவது பிறந்த நாளையொட்டியே இந்த சுற்றுப்போட்டியானது நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

இக்கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது யாழ்.மாவட்ட பாடசாலை கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
ஆண்களுக்கான கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியும் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியும் மோதிக் கொண்டன.

மூன்று சுற்றுக்களைக் கொண்டதாக இறுதிப்போட்டி நடைபெற்றது.

முதல் சுற்றில் சோமஸ் கந்தாக் கல்லூரி 25:22 புள்ளிகள் என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றது.
இருந்தும், இரண்டாம் சுற்றில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி 25:20 புள்ளிகள் என்ற முன்னிலை பெற்று போட்டியில் விறுவிறுப்பினை ஏற்படுத்தியது.

இருந்தும், இறுதிச்சுற்றில் சோமஸ்கந்தாக் கல்லூரி 25:20 புள்ளிகள் என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றது.
இறுதியில் மொத்தப் புள்ளிகள் அடிப்படையில் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி 70:67 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X