2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சிநேகபூர்வ கிரிகெட் போட்டி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் பொலனறுவை மெதிரிகிரிக மத்திய கலலூரிக்கும் இடையிலான 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சிநேகபூர்வமான கிரிகெட் போட்டி நேற்று புதன்கிழமை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் வெற்றிபெற்றனர்.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடினர்.
இன்னிங்ஸ் முறையில் இப்போட்டி  நடைபெற்றது.

முதல் இன்னிங்கஸில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர்  சகல விக்கெட்டுக்களையும் 27 ஓவர்களில் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றனர்.

இவ்வணி சார்பாக டிருசன்  59, மனோசின் 27 மனோஜன் 14 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு களம் புகுந்த மெதிரிகிரியமத்திய கல்லூரி அணியினர் 31 ஓவர்களில்  சகல விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

இதன்மூலம் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 15 ஓட்டங்களால் வெற்றிபெற்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X