2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

அல் அக்ஷா விளையாட்டுக் கழகம் வெற்றி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


முர்ஷித்


வாழைச்சேனை – மாவடிச்சேனை அல் இக்ராஹ் விளையாட்டுக் கழகம் தனது 19ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய அல் இக்ராஹ் சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இருபது ஓவர்களைக் கொண்ட இச்சுற்றுப் போட்டியில் 12 கழகங்கள் கழந்துகொண்டன.

இறுதிப் போட்டியில் வாழைச்சேனை அல் அக்ஷா விளையாட்டுக் கழகமும் மாவடிச்சேனை அல் இக்ராஹ் விழையாட்டுக் கழகமும் மோதிகொண்டன.

நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய மாவடிச்சேனை அல் இக்ரஹ் விளையாட்டுக் கழகம் வாழைச்சேனை அல் அக்ஷா விளையாட்டுக் கழகத்தை துடுப்பெடுத்தாட பணித்தது.

வாழைச்சேனை அல் அக்ஷா விளையாட்டுக் கழகம் இருபது ஓவர் முடிவில் ஏழு விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றதுடன் அவர்களை எதிர்த்தாடிய மாவடிச்சேனை இல் இக்ராஹ் விளையாட்டுக் கழகம் 16.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

வாழைச்சேனை அல் அக்ஷா விளையாட்டுக்கழகம் 67 ஓட்டங்களால் வெற்றியீட்டிக் கொண்டது.

இறுதிப் போட்டிக்கான நிகழ்வுகள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜே.அல்பத்தாஹ் தலைமையில் இடம்பெற்ற போது அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லாள் செனவிரத்ன, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான எல்.ரீ.அஸ்மி, எம்.முஹாஜிதீன் ஆகியோர் கலந்துகொண்டு கழகங்களுக்கான பரிசில்களை வழங்கிவைத்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X