2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

யாழ். மாவட்ட அரச ஊழியர்கள் அணி சம்பியன்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட ஆண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் யாழ்.மாவட்ட அரச ஊழியர்கள் வலைப்பந்தாட்ட அணி சம்பியனாகியுள்ளது.

அரச ஊழியர் விளையாட்டுச் சங்கத்தினால் கொழும்பு டொறிங்டன் விளையாட்டு மைதானத்தில் மேற்படி வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் கொழும்பு பொலிஸ் அணியினை எதிர்த்து யாழ்.அரச ஊழியர் அணியும் மோதிக் கொண்டன.

முதல் பாதியாட்டத்தில் யாழ். மாவட்ட அரச ஊழியர் அணி 9:5 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தினையும் யாழ்.மாவட்ட அரச ஊழியர் அணி 8:3 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றியது.

இறுதியில், யாழ்.மாவட்ட அரச ஊழியர் அணி 17:8 புள்ளிகள் என்ற அடிப்படையில் கொழும்பு பொலிஸ் அணியை வென்று அகில இலங்கை சம்பியனாகத் தெரிவாகியது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X