2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் கபடி போட்டி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஜவ்பர்கான், தேவஅச்சுதன்


முதல் தடவையாக மட்டக்களப்பில் நடைபெற்ற கபடி சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் கேகாலை மாவட்ட மாவட்ட அணியும், பெண்கள் பிரிவில் கம்பஹா மாவட்ட அணயும் முதலிடத்தை பெற்றுக்கொண்டன.

இலங்கை கபடி சம்மேளனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மைக்கல்மென் விளையாட்டுக்கழகம் நடத்திய கிசோர் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்துக்கான கபடி சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இறுதிப்போட்டியில் பெண்கள் பிரிவில் கம்பஹா மாவட்ட அணியும், கேகலை மாவட்ட அணியும் மோதிகொண்டன. இப்போட்டியில், கஹம்பஹா மாவட்ட அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆண்கள் பிரிவுக்கான இறுதிப்போட்டி கேகாலை மாவட்ட அணிக்கும் காலி மாவட்ட அணிக்குமிடையில் நடைபெற்றது.

இதில் கேகாலை மாவட்ட அணி 20 புள்ளிகளையும்,  காலி மாணவட்ட அணி 9 புள்ளிகளையும் பெற்றது. 11 புள்ளிகள் வித்தியாசத்தில் கேகாலை மாவட்ட அணி வெற்றிபெற்றது.

இதில் மூன்றாவது இடத்தினை மட்டக்களப்பு மைக்கல் மென் அணி பெற்றுக்கொண்டது.

இதன் பாசிளிப்பு வைபவத்தில் இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவரும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சருமான மகிபால ஹேரத், இலங்கை கபடி சம்மேளனத்தின் செயலாளர் எச்.யு.ஏ.டி.ஹெட்டியாராய்ச்சி, அருட்தந்தை டொமினிக் சுவாமிநாதன், மைக்கல் மென் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் சட்டத்தரணி பி.எம்.சுலோஜன் உட்பட விளையாட்டுக்கழகங்களின்
வீரர்கள் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இப்போட்டியின் சிறந்த வீராங்கணையானையாக கம்பஹா மாவட்ட அணியை சேர்ந்த மதுசானி சந்துருக்காவும், சிறந்த
வீரராக காலி மாவட்ட அணியைச்சேர்ந்த எம்.குறூபும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த கபடி சுற்றுப்போட்டியில்  18 அணிகள் பங்குபற்றின.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X