2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

காந்தி ஸ்டார் அணி சம்பியன்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


ஊறணி காந்திகிராமம் காந்தி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 26 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கடந்த 5 தினங்களாக
கிழக்கு மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட மின்னொளி கிரிக்கட் சுற்றுப்போட்டியில்  காந்திகிராமம் காந்தி ஸ்டார் அணி சம்பியனாகியுள்ளது.

48 அணிகள் பங்கு கொண்ட இப்போட்டியில் முதலாமிடத்தை காந்திகிராமம் காந்தி ஸ்டார் விளையாட்டுக் கழகமும் இரண்டாமிடத்தை கரவேப்பங்கேணி சென் அந்தனிஸ் விளையாட்டுக் கழகமும் மூன்றாமிடத்தை மாமாங்கம் டிஸ்கோ விளையாட்டுக் கழகமும் நான்காமிடத்தை எவகிறீன் அணியினரும் பெற்றக்கொண்டனர்.

முதலாவது இடத்திற்கு வெற்றிக்கிண்ணமும் முப்பதனாயிரம் ரூபா பணப்பரிசும் இரண்டாமிடத்திற்கு வெற்றிக் கிண்ணமும் பதினையாயிரம் ரூபா பணப்பரிசும் மூன்றாமிடத்திற்கு வெற்றிக் கிண்ணமும் ஐயாயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டதடன் நான்காமிடத்துக்கு வெற்றிக்கிண்ணம் மாத்திரம் வழங்கப்பட்டது.

இதேவேளை ஆட்ட நாயகன், சிறந்த விக்கட் காப்பாளர், அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர்,சிறந்த களத் தடுப்பாளர்,சிறந்த இணைப்பாட்ட வீரர், சிறந்த பந்து வீச்சாளர் ஆகியோருக்கும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

விளையாட்டுக் கழக தலைவர் தே.டிலக்சன் தலைமையில் இடம்பெற்ற இப் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறப்பினர்களாகிய பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X