2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

அரச அதிபர் வெற்றிக்கிண்ண துடுப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 03 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

அரச அதிபர் வெற்றிக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு  சங்கானை, ஊர்காவற்றுறை பிரதேச செயலக அணிகள் தெரிவாகியுள்ளன.

யாழ். மாவட்டச் செயலகத்தின் விளையாட்டுப் பிரிவினால் அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்காக யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் மேற்படி விளையாட்டுப் போட்டியின் துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் சங்கானைப் பிரதேச செயலக அணி 3 இலக்குகளால் சாவகச்சேரி பிரதேச செயலக அணியினை வென்றது.  இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலக அணி 20 ஓட்டங்களால் யாழ். மாவட்ட செயலக அணியை வெற்றி பெற்றது.

மேற்படி இரு அணிகளுக்குமிடையிலான இறுதிப்போட்டி நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமென யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X