2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

யாழில் முதலாவது புற்றரை துடுப்பாட்ட மைதானம்

A.P.Mathan   / 2013 நவம்பர் 04 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்
 
யாழில் முதலாவது புற்றரை மைதானம் அமைக்கும் பணிகள் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கை தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய, யாழில் முதலாவது புற்றரை துடுப்பாட்ட மைதானம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (01) முதல் புற்றரை மைதானம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
யாழ். மாவட்ட துடுப்பாட்ட வீரர்கள், வெளி மாவட்டங்களில் போட்டிகளில் கலந்துகொள்வதில் புற்றரை மைதானம் பெரும் பிரச்சினையாகவிருந்தது. ஏனெனில் யாழ்ப்பாணத்தில் மற்றிங் (சாக்கு விரிப்பு) துடுப்பாட்ட மைதானங்களே இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
 
இதனால் யாழ்ப்பாணத்தில் விளையாடிப் பழகிய யாழ். மாவட்ட துடுப்பாட்ட வீரர்கள் புற்றரை மைதானங்களில் நடைபெறும் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதிலும், துடுப்பாட்ட வீரர்கள் பந்துவீச்சுக்களை எதிர்கொள்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X