2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

சென்.பீற்றர்ஸ் - கண்டி ரினிற்ரி அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன

Kogilavani   / 2013 நவம்பர் 05 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


முரளிக்கிண்ண இறுதிப்போட்டிக்கு கொழும்பு சென்.பீற்றர்ஸ் கல்லூரி அணியும் கண்டி ரினிற்ரி கல்லூரி அணியும் தெரிவாகியுள்ளன.

நல்லிணக்கத்திற்காக முரளி வெற்றிக்கிண்ணத்திற்கான இருபது – 20 போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (02) முதல் வடமாகாணத்தின்; ஐந்து இடங்களில் நடைபெற்று வருகின்றது.

12 அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியின் தெரிவுப் போட்டிகளிலிருந்து 4 அணிகள் தெரிவு செய்யப்பட்டு, அவ்வணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டிகள் திங்கட்கிழமை (04) கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

தர்மசோகா கல்லூரிக்கும் ரினிற்ரி கல்லூரிக்கும் இடையிலான முதலாவது அரையிறுதியாட்டத்தில் நாணயச் சுழற்சியில் வென்ற தர்மசோகா கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி 20 பந்துபரிமாற்றங்களை எதிர்கொண்டு அனைத்து இலக்குகளையும் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலளித்தாடிய ரினிற்ரி கல்லூரி அணி 17 பந்துபரிமாற்றங்களில் 3 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரினிற்ரி அணியினைச் சேர்ந்த ரொன் கே சந்திரகுப்த தெரிவு செய்யப்பட்டார்.

நல்லிணக்கத்திற்கான அமைப்பின் சீனிகம அணிக்கும் கொழும்பு சென்.பீற்றர்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற சென்.பீற்றர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட்டது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நல்லிணக்க அமைப்பு அணி 15 பந்துபரிமாற்றங்களில் 44 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

பதிலளித்தாடிய சென்.பீற்றர்ஸ் அணி 11.2 பந்துபரிமாற்றங்களில் 2 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சென்.பீற்றர்ஸ் அணியின் ஷகான் நாணயக்கார தெரிவு செய்யப்பட்டார்.
இறுதிப்போட்டி நாளை செவ்வாய்க்கிழமை (05) காலை 8 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X