2025 ஜூலை 19, சனிக்கிழமை

சினேகபூர்வ மென்பந்து கிரிக்கட் போட்டி

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எப்.எம். தாஹிர்


பதுளை அல் அதான் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுகூட்டத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சினேக பூர்வ மென்பந்து கிரிக்கட் போட்டி பதுளை பதுளுப்பிட்டிய கால்;பந்தாட்ட மைதானத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.
 
இதன்போது பதுளை அல் அதான் பழைய மாணவர் சங்கங்களின் 15 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு கொண்டன.

இறுதி போட்டிக்கு பூம் பூம் அணியும், பரகத் அணியும் தெரிவாகின. இதன்படி பூம் பூம் அணியை பரகத் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டு அல் அதான் பழைய மாணவர் சங்க 2013 சவால் கிண்ணத்தை பரகத் அணி சுவீகரித்து கொண்டது.

போட்டி தொடரின் தொடர் நாயகனாக மொஹமட் ஜவ்பர், சிறந்த விளையாட்டு வீரராக, தில்ஷhன், சிறந்த பந்துவீச்சாளராக ஏ.எல்.பௌமி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

சங்கத்தின் விளையாட்டு செயலாளர் காதிர்கான் தலைமையில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பெறுமதியான பரிசில்களும், போட்டி தொடரில் திறமை காட்டிய வீரர்களுக்கு நுவநட கையடக்க தொலைபேசியும் பரிசாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பதுளை மாநகர முதல்வர் சட்டத்தரணி உபாலி நிஸ்ஸங்க குணசேரக, ஊவா பிராந்திய போக்குவரத்து சபை முகாமையாளர் கே.எச்.பிரேம லால் த சுஜீவ சில்வா மற்றும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் சசி சுரங்க, மௌலவி இக்பால், மௌலவி ரினாஸ் மொஹமட், முன்னால் அதிபர் எம்.பாருக், அல் அதான் மகா வித்தியாலய பிரதி அதிபர் எம். சருக், உதவி ஆசிரியர் எம்.கே.எம். நிஹார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X