2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஜனாதிபதி கிண்ண இறுதி போட்டிக்கு இலவன் ஸ்டார்ஸ் தெரிவு

Super User   / 2013 நவம்பர் 21 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனாதிபதி கிண்ணம் - 2013 போட்டித் தொடரின் இறுதி போட்டிக்கு பரகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.

குருநாகல் மாவட்ட கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள கழகங்களுக்கு இடையில் ஜனாதிபதி கிண்ணம் - 2013 கால்ப்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த தொடரின் அரையிறுதி போட்டியொன்று நேற்று புதன்கிழமை மாளிகாபிட்டிய மைதானத்தில் இடம்பெற்றது. இந்த போட்;டியில் பரகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் மற்றும் குருநாகல் பெளிகான்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இரு அணிகளும் எந்தவொரு கோலையும் போடாது போட்டி சமநிலையில் நிறைவுற்றது. இதனால் பெனால்டி மூலம் வெற்றி தோல்வி முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.இந்த பெனால்டியில் 5 - 3 எனும் அடிப்படையில் இலவன் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X