2025 ஜூலை 19, சனிக்கிழமை

பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டிகள்

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இசெட்.சாஜஹான்


நீர்கொழும்பு கோட்டப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்  வியாழக்கிழமை நீர்கொழும்பு தளுவகொட்டுவ சாந்த ஹானா ஆரம்பப் பிரிவு பாடசாலை மைதானத்தில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பி.சி.பி. பெர்னாந்து தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நீர்கொழும்பு வலயக்கல்வி அபிவிருத்திக்;கு பொறுப்பான உதவிப் பணிப்பாளர் அன்டனி பெர்னாந்து, உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் காமினி பெர்னாந்து, ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் தளுவகொட்டுவ சாந்த ஹானா ஆரம்பப் பிரிவு பாடசாலை முதலாமிடத்தையும், பெண்கள் பிரிவில் ஆவே மரியாள் கன்னியர் மட பாடசாலை முதலாமிடத்தையும் பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X