2025 ஜூலை 19, சனிக்கிழமை

கராத்தே போட்டியில் அம்பாறை மாவட்டம் முதலிடம்

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


இலங்கை கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண கிளை நடத்திய கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்டம் 35 தங்கப்பதக்கங்களைப் பெற்று முதலிடத்ததைப் பெற்றுக்கொண்டது.

கல்முனை நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச்சேர்ந்த 200 போட்டியாளர்கள் பங்கு கொண்டனர்.

முழு நாளும் இடம்பெ;ற்ற இச்சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்டம் 35 தங்கம் 25 வெள்ளி 20 வெண்கப் பதக்களைப்பெற்று முதலிடத்தைப்பெற்றுக் கெனாண்டது.

மட்டக்களப்பு மாவட்டம் 25 தங்கம் 15 வெள்ளி 10 வெண்கலப்பதக்கங்களைப் பெற்று இரண்டாமிடத்ததையும் திருகோணமலை மாவட்டம் 10 தங்கம் 12 வெள்ளி 8 வெண்கலப்பதக்கங்களுடன் மூன்றாமிடத்தையும் தட்டடிக்கொண்டது.

இச்சுற்றுப்போட்டியில் கறுத்தப்பட்டிகளைப் பெற்றுக்கொண்ட 58 வீரர்கள் தேசிய சுற்றுப்போட்டியில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கராத்தே சம்மேளன பொதுச்செயலாளர் ஏ.ஆர்.எம்.இக்பால் தலைமையில் நடைபெற்ற  பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலை கழக பதிவாளர் எம்.அப்துல் சத்தார் கலந்து கொண்டார்.கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர் ஏ.எல்.தவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X