2025 ஜூலை 19, சனிக்கிழமை

யாழ். கிரிக்கெட் மத்தியஸ்தர் சங்கத்தின் தலைவராக சிவசங்கர் தெரிவு

Super User   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


யாழ். கிரிக்கெட் மத்தியஸ்தர் சங்கத்தின் தலைவராக செ.சிவசங்கர் தெரிவு செய்யப்பட்டார்.  இந்த சங்கத்தின் 2014ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவு மேற்கொள்வதற்கான கூட்டம் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய  மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன்போதே யாழ். கிரிக்கெட் மத்தியஸ்தர் சங்கத்தின் தலைவராக செ.சிவசங்கர் தெரிவு செய்யப்பட்டார். இந்த சங்கத்தின் உப தலைவர்களாக ஆர்.செல்வராஜா, ப.முருகவேல், என்.ரவீன்திரா, கோ.கோபிகிருஷ்ணா, எஸ்.சிவச்செல்வன் ஆகியோரும் செயலாளராக  ரி.றொபேசனும் பொருளாளராக ந.சிவராஜாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதற்கு மேலதிகமாக ரி.கிருபாகரன், வை.நிஷhந்தன், ஆர்.ஸ்ரீதரன், எம்.சிதம்பரப்பிள்ளை, பி.வசிகரன் ஆகியோர் நிர்வாக குழு உறுப்பினர்களாகவும் கணக்காய்வாளர்களாக ந.சுதேஸ்குமார், எஸ்.கோகுலன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X