2025 ஜூலை 19, சனிக்கிழமை

கிழக்கு மாகாண அமைச்சுகள், திணைக்களங்களுக்கிடையிலான சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்
 
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாண அமைச்சுகள், திணைக்களங்களுக்கிடையிலான சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
 
இதில் 17 அணியினர் பங்குபற்றினர். கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் நா.மதிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அமலநாதன் கலந்து சிறப்பித்து இப்போட்டியினை அரம்பித்து வைத்தார்.
 
இதனைத்தொடர்ந்து போட்டிகள் இடம்பெற்றன. இறுதிப் போட்டியில் கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தை கடும் போட்டியின் மத்தியில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கிகொண்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X