2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மைலோ கிண்ண கால்ப்பந்தாட்ட முடிவுகள்

Kogilavani   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ். மாவட்டத்தில் முதன் முறையாக நெஸ்ரில் நிறுவனத்தின் அனுசரணையிலான 'மைலோ கிண்ண' கால்ப்பந்தாட்ட போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

யாழ்.மாவட்ட அணிகளில் பருத்தித்துறை பிரதேச அணிகள் ஒரு பிரிவாகவும் வலிகாமம் அணிகள் இன்னொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

பருத்தித்துறை பிரதேச அணிகளுக்கிடையிலான போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (06) இமையாணன் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

தொடர்ந்து யாழ், வலிகாமம் அணிகளுக்கிடையிலான போட்டிகள் கடந்த திங்கட்கிழமை (09) துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகின.
நேற்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற போட்டிகளில்,

நாவாந்துறை சென்.மேரிஷ; அணி 3: 1 என்ற கோல் கணக்கில் நவாலி சென்.பீற்றர்ஸ் அணியினையும், பாiஷயூர் சென்.அன்ரனீஸ் அணி 2: 1 என்ற கோல் கணக்கில் இளவாலை சென்.ஹென்றிஸ் அணியினையும், குருநகர் பாடும்மீன் அணி 2: 0 நாவாந்துறை சென்.நீக்கிலஸ் அணியினையும், ஊரெழு றோயல் அணி 3: 1 என்ற கோல் கணக்கில் மயிலங்காடு ஞானமுருகன் அணியினையும் வென்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X