2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சென்.அன்ரனீஸ், சென்.மேரிஸ் அணிகள் இறுதி போட்டிக்கு நுழைவு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


மைலோ கிண்ண கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு பாஷையூர் சென். அன்ரனீஸ், நாவாந்துறை சென்.மேரிஸ் அணிகள் நுழைந்துள்ளன.

யாழ். மாவட்டத்தில் நெஸ்ரில் நிறுவனத்தின் அனுசரணையிலான 'மைலோ கிண்ண' கால்ப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்று வந்தன. பருத்தித்துறை பிரதேச அணிகள் ஒரு பிரிவாகவும், யாழ். வலிகாமம் அணிகள் ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன.

இரண்டு பிரிவுகளிலும் தலா 4 அணிகள் தெரிவு செய்யப்பட்டு அந்த அணிகளுக்கிடையில் காலிறுதிப் போட்டிகள் யாழ். மாவட்ட ரீதியில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன.

தொடர்ந்து அரையிறுதி ஆட்டங்கள் நேற்று (12) ஆரம்பமாகியதுடன், முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் விண்மீன் அணியினை எதிர்த்து பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணி மோதியது. இதில் சென். அன்ரனீஸ் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை இடம்பெற்ற போது, நாவாந்துறை சென்.மேரிஸ் அணியும் ஊரெழு றோயல் அணியும் மோதின. போட்டி நேரத்தில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தன.

போட்டியின் வெற்றியாளரினைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டபோது, சமநிலை தவிர்ப்பு உதையில் சென்.மேரிஸ் அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இறுதிப்போட்டி நாளை சனிக்கிழமை (14) பிற்பகல் 1 மணிக்கு யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு பிரதம அதிதியாக இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ரஞ்சித் றோட்ரிக்கோ கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X