2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மைலோ கிண்ணத்தை நாவாந்துறை சென்.மேரிஷ் அணி தனதாக்கியது

Super User   / 2013 டிசெம்பர் 15 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


மைலோ கிண்ணத்தை நாவாந்துறை சென்.மேரிஷ் அணி தனதாக்கியது. மைலோ கிண்ண இறுதிப் போட்டி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த போட்டியில் அதிதிகளாக பிரதி சபாநாயகர் சண்டிம வீரக்கொடி, வட மாகாண கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நெஸ்லே நிறுவனம் யாழ். மாவட்டத்தில் முதன்முறையாக மைலோ கிண்ண கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

பருத்தித்துறை அணிகள் ஒரு பிரிவாகவும், வலிகாமம் அணிகள் இன்னொரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன. இதனடிப்படையில், நாவாந்துறை சென். மேரிஷ் அணியும் பாஷையூர் சென். அன்ரனீஸ் அணியும் இறுதி போட்டிக்குள் நுழைந்தன.

இந்த இறுதி போட்டியின் ஆரம்பமான நிமிடம் தொடக்கம் சென்.மேரிஷ் அணி வீரர்களின் ஆதிக்கம் அதிக்கம் அதிகமாகக் காணப்பட்டது. அவ்வணி வீரர் அருள்ராசா யூட் கோல் அடித்து அணியினை முன்னிலைப்படுத்தினார்.

முதல் பாதியாட்டத்தில் சென்.மேரிஷ் அணி 1:0 என்று முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியாட்டத்தில் ஆக்கிரோஷமான ஆட்டம் மைதானத்தில் வெளிப்பட்டது. இரு அணிகளின் வீரர்கள் இருவர் மைதானத்தில் தள்ளப்பட்டதினால் நடுவரால் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கை செய்யப்பட்டனர்.

தொடர்ந்து ஆட்டம் நடைபெற, அருள்ராசா யூட் தனது இரண்டாவது கோலினை அடித்தார். இந்தக் கோல் ஆட்டநேர முடிவு வரையும் நீடித்தது. இறுதியில் சென்.மேரிஷ் அணி 2:0 என்ற கோல் கணக்கில் மைலோ கிண்ண முதலாவது சம்பியனாகியது.

மைலோ கிண்ணத் தொடரின் சிறந்த கோல் காப்பாளராக வட மராட்சி விண்மீன் அணியினைச் சேர்ந்த கிருசாந்து பொன்ராசா அனஸ்லி டினேஸும், சுற்றுத் தொடரின் நாயகன் (7 கோல்கள்) மற்றும் இறுதிப் போட்டியின் நாயகன் (2 கோல்கள்) விருதுகளை சென்.மேரிஷ் அணியின் அருள்ராசா யூட்டும் பெற்றுக்கொண்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X