2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சதுரங்க போட்டியில் பங்கேற்க கிருத்திகா டுபாய் பயணம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இளைஞர் அணிகளுக்கிடையிலான சதுரங்க செம்பியன் ஷிப் போட்டியில், கண்டி பெண்கள் உயர்தர பாடசாலையில் மூன்றாம் தரத்தில் கல்விப்பயிலும் கிருத்திகா கார்த்திகேயன் பங்கேற்கவுள்ளார்.

எட்டு வயதிற்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கான போட்டியிலேயே இவர் பங்கேற்கவுள்ளார்.

இந்த போட்டிகள் டுபாய் அல்ஹயின் பல்கலைக்கழகத்தில் நாளை 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையிலும் நடைபெறவிருக்கின்றது.

இலங்கையில் நடைபெற்ற பல்வேறான சதுரங்கபோட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியுள்ள இவரை நிரங்க கந்தேயாராச்சி மற்றும் திருமதி பிரியங்கா ரணசிங்க ஆகியோர் பயிற்றுவித்துள்ளனர்.

இவர் வைத்தியர்களான திரு.திருமதி கார்த்திகேயனின் புதல்வியாவார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X