2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

உழவர் திருநாள் கால்ப்பந்தாட்ட போட்டி முடிவுகள்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

உழவர் திருநாள் கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வளர்மதி, அண்ணா ஏ விளையாட்டுக் கழகங்கள் வெற்றிபெற்றன.

வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக்கின் ஆதரவுடன் அராலி தெற்கு மாவத்தை விளையாட்டுக் கழகம் உழவர் திருநாளையொட்டி நடத்தும் அணிக்கு ஏழு பேர் கொண்ட கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் ஆட்டங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றன.

முதலாவது ஆட்டத்தில் மூளாய் வளர்மதி விளையாட்டுக்கழக அணியும் அராலி கிழக்கு அண்ணா விளையாட்டுக்கழக பி அணியும் மோதின. இதில் ஆட்ட நேரத்திற்குள் இரண்டு அணிகளும் தலா 3 கோல்கள் பெற்றிருந்தன.

தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டபோது, அதில் வளர்மதி விளையாட்டுக்கழக அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் அராலி அண்ணா விளையாட்டுக் கழக ஏ அணியும் துனைவி நியுசென் ஸ்ரார் விளையாட்டுக் கழக ஏ அணியும் மோதின. இப்போட்டியில் அண்ணா விளையாட்டுக்கழக அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X