2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சென்.மேரிஸ் அணி சம்பியன்

Kogilavani   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யு.நாதன், வி.தபேந்திரன்


வதிரி டயமன்ஸ் அணியின் நூற்றாண்டு கால்பந்தாட்ட போட்டியில்  நாவாந்துறை சென்.மேரிஸ் அணி  4:2 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனாகியது.

வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழக அணி தனது 100 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி வடமாகாண ரீதியில் அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை தமது விளையாட்டுக்கழக மைதானத்தில் நடத்தி வந்தது.

வட மாகாணத்திலிருந்து 54 அணிகள் பங்குபற்றிய மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (22) நடைபெற்றபோது மன்னார் சென்.லூசியன்ஸ் விளையாட்டுக்கழக அணியினை எதிர்த்து நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது.

போட்டி ஆரம்பித்த 2 ஆவது நிமிடத்தில் சென்.மேரிஸ் அணி வீரர் அருள்ராசா யூட் முதலாவது கோலினைப் பெற்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் 8 ஆவது நிமிடத்தில் சென்.லூயிஸ் அணி வீரர் பிராங்கிளின் கோலொன்று அடித்தார்.

எனினும் 21 ஆவது நிமிடத்தில் சென்.மேரிஸ் அணி வீரன் யூட் தனதும், தனது அணிக்குமான இரண்டாவது கோலினைப் பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து 23 ஆவது நிமிடத்தில் சென்.மேரிஸ் அணி வீரர் நிதர்சன் மேலும் ஒரு கோல் அடித்தார்.

இருந்தும் சென்.லூயிஸ் அணி வீரன் எடிசன் பதிலுக்கு ஒரு கோல் போட்டார். முதல் பாதியாட்டத்தில் சென்.மேரிஸ் அணி 3:2 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டமையினால் கோலடிக்கும் வாய்ப்புக்கள் வீணாகின.
போட்டியின் 55 ஆவது நிமிடத்தில் சென்.மேரிஸ் அணி வீரர் நிதர்சன் ஒரு கோல் போட்டு சென்.மேரிஷ; அணியின் வெற்றியினை உறுதி செய்தார்.

இறுதியில் சென்.மேரிஸ் அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக சென்.மேரிஸ் அணியின் அருள்ராசா யூட்டும், சிறந்த கோல் காப்பாளராக அதே அணியின் சார்ள்ஸும், தொடர் ஆட்டநாயகனாக சென்.லூசியஸ் அணியின் எடிசனும், தொடரில் அதிக கோல் அடித்த வீரராக யங்கென்றீஸ் அணியின் ஞானமும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன், இத்தொடரில் சிறந்த ஒழுக்கமிக்க அணியாக யாழ். விண்மீன் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பியானகிய சென்.மேரிஸ் அணிக்கு 50 ஆயிரம் ரூபாவும், இரண்டாம் இடம்பெற்ற சென்.லூயிஸ் அணிக்கு 20 ஆயிரம் ரூபாவும் பணப்பரிசில் வழங்கப்பட்டது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X