2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கான விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறை

Kogilavani   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


இடம்பெயர்ந்த பெண்கள் தீர்மானம் எடுத்தலிலும் பொருளாதார வலுவூட்டலிலும் பங்கு பற்றுதலுக்கு ஏற்ற சூழலுக்கு சாத்தியமளித்த திட்டத்தின் கீழ் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கான விழிப்புணர்வுப் பயிற்சிப்பட்டறை வவுணதீவில் இடம்பெற்று வருகின்றது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு அமெரிக்கன் தூதரகத்தின் அனுசரணையுடன் 6 கட்ட வலுவூட்டல் பயிற்சியினை நடத்தவுள்ள நிலையில் இதன் முதல் கட்டப்பயிற்சிப் பட்டறை ஞாயிற்றுக்கிழமை (22) ஆரம்பமானது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவி சல்மா ஹம்சா தலைமையில் மண்முனை மேற்குப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமான இப் பயிற்சிப் பட்டறையில் சுமார் 70 பேர் வரைக் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X