2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

வேப்பையடி உதயா விளையாட்டு கழகம் சம்பியன்

Super User   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


சவளக்கடை, 6ஆம் கொலனி றோயல் விளையாட்டு கழகத்தின் 15ஆவது வருட நிறைவை முன்னிட்டு அணிக்கு 8 பேர் கொண்ட 6 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டியொன்று இடம்பெற்றது.

இந்த சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி 6ஆம் கொலனி அல்-தாஜூன் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் நாணயச் சுழச்சியில் வெற்றி பெற்ற வேப்பையடி உதயா விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்படுத்தாட களம் இறங்கி, 6 ஓவர்களுக்கு 5 விக்கட்களை இழந்து 62 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய 12ஆம் கொலனி கதரினா விளையாட்டுக் கழகம் 6 ஓவர் நிறைவில் சகல விக்கட்கலையும் இழந்து 28 ஒட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனையடுத்து வேப்பையடி உதயா விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது. றோயல் விளையாட்டுக் கழக அணித் தலைவர் வை.பாரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வேதேச விவகாரங்களுக்கான பணிப்பாளரும் சவூதி அரேபிய தூதுவராலயத்தன் பொதுசனத் தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர், றோயல் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக தலைவர் எம்.எச். கபீர், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஏ.எல் ஜலீல், ஜூம்மா பள்ளிவாசல் செயலாளர் எஸ்.ஐ.முபீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X