2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

யாழ். மத்திய கல்லூரி அணி வெற்றி

Super User   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 5 விக்கெட்டுக்களினால் விக்ரோறியன்ஸ் அணியினை வெற்றியீட்டியியுள்ளது.

யாழ். மத்திய கல்லூரியின் 19 வயது பிரிவு அணிக்கும் சுழிபுரம் விக்டோரியன்ஸ் விளையாட்டு கழக அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி நேற்று திங்கட்கிழமை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய விக்டோரியன்ஸ் விளையாட்டு கழக அணி 23.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அரிதரன் 18, கணேஸ் 14 மற்றும் சஜந்தன் 13 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் யாழ். மத்திய கல்லூரி அணி சார்பாக அலென்ராஜ் 6 (05), யூலியஸ் கலிஸ்ரன் 2 (11) விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு  துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி 26 ஓவரில் எதிர்கொண்டு ஐந்து விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 73 என்ற வெற்றி இலக்கினை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் டினேதஜன் 16, சங்சஜன் 12, நிரோஜன் 12 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழக அணி சார்பாக சுரேந்திரன் 2 (14) விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X