2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கடற்கரைக் கரப்பந்தாட்டத்தில் ஆவரங்கால் மத்திய அணி சம்பியன்

Kogilavani   / 2014 ஜனவரி 13 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்;கத்தினால் யாழ்.மாவட்டத்தில் முதற் தடவையாக மாவட்ட கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட கடற்கரைக் கரப்பந்தாட்டப் போட்டியில் புத்தூர் ஆவரங்கால் மத்தி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

காரைநகர் கசூரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழக அணியும் மட்டுவில் ஐங்கரன் விளையாட்டுக் கழக அணியும் மோதிக்கொண்டன.

மூன்று சுற்றுக்களை கொண்ட இந்த இறுதிப் போட்டியில் முதல் இரண்டு நேர் சுற்றுக்களையும் ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழகம் முறையே 21:19, 21:17 புள்ளிகள் அடிப்படையில் ஐங்கரன் விளையாட்;டுக் கழகத்தை வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.

யாழ்.மாவட்ட கரப்பந்தாட்ட அணிகளுக்கு கடற்கரைக் கரப்பந்தாட்டம் புதிய அனுபவம் ஆக இருந்தமையினால் இச்சுற்றுப்போட்டியில் விறுவிறுப்பான ஆட்டத்தினை காண்பது அரிதாகக் காணப்பட்டபோது, இறுதிப் போட்டி வரையும் முன்னேறிய அணிகள் பங்குபற்றிய போட்டிகளின் அனுபவத்தின் அடிப்படையில் இறுதிப்போட்டியில் விறுவிறுப்பாக விளையாடின.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக காரைநகர் பிரதேச சபைத்தலைவர் கெ.ஆனைமுகன் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக் கிண்ணத்தையும் பணப்பரிசில்களையும் வழங்கினார். (முதலிடத்திற்கு 4000 ரூபாவும், இரண்டாமிடத்திற்கு 3000 ரூபாவும் வழங்கப்பட்டன).




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X