2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஏழாலை தெற்கு அ.மி.த.க பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள்

Kogilavani   / 2014 ஜனவரி 14 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்


ஏழாலை தெற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையின் மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிப்பதற்காக அக்கல்லூரியின் பழைய மாணவனும், சென்.ஜோன்ஸ் கல்லூரி ஆசிரியருமான வி.குமணனினால் விளையாட்டு உபகரணங்கள் நேற்று (13) கையளிக்கப்பட்டன.

பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், பூப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களுக்கான ரூபா 10 ஆயிரம் பெறுமதியுடைய உபகரணங்கள் இதன்போது கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலி.தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தி.பிரகாஷ், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சி.ஹரிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X