2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உழவர் திருநாள் கால்பந்தாட்ட போட்டியில் யங் ஹென்றீஸ் சம்பியன்

Super User   / 2014 ஜனவரி 15 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

உழவர் திருநாளையயொட்டி வலிகாமம் கால்பந்தாட்ட லீகின் அனுசரனையுடன அராலி தெற்கு  மாவத்தை விளையாட்டு கழகம் நடத்திய 7 பேர் பங்குபற்றிய  கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் இளவாலை யங்ஹென்றீஸ் விளையாட்டுக் கழக அணி சம்பியனாகியது.

மாவத்தை விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று (14) பிற்பகல் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் மானிப்பாய் ரெட்றேஞ்சர் விளையாட்டுக் கழக அணியும் இளவாலை யங் ஹென்றீஸ் விளையாட்டுக் கழக அணியும் மோதிக் கொண்டன.

முதல் பாதியாட்டம் ஆரம்பமாகிய சில நிமிட நேரத்தில் ரெட்றேஞ்சர் விளையாட்டு கழகம் தனது முதலாவது கோலைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு யங்ஹென்றீஸ் விளையாட்டுக் கழக அணி முதல் பாதியாட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஒரு கோல் பெற்றது. இதனால் முதல் பாதியாட்டம் 1:1 என்று சமநிலையில் முடிவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் யங் ஹென்றீஸ் விளையாட்டுக் கழக அணி போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தி அடுத்தடுத்து 4 கோல்களைப் போட்டு ஆட்டத்தினை தம்வசப்படுத்தியது. பதிலுக்கு ரெட்றேஞ்சர்ஸ் அணியினால் ஒரு கோலினை மாத்திரம் பெறமுடிந்தது.  இறுதியில் இளவாளை யங்ஹென்றீஸ் அணி 5:2 என்ற கோல் கணக்கில் சம்பியனாகியது.

வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை இந்த போட்டிக்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வட மாகாண கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகலராசா வழங்கினார்.

இவ்விளையாட்டு நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், பாலச்சந்திரன் கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X