2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ்.மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

Kogilavani   / 2014 ஜனவரி 15 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

யாழ்.மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்தி வரும் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்;டியின் 2013 ஆம் வருடத்திற்கான போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) திகதி முதல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்து கல்லூரி மைதானங்களில் நடைபெறவுள்ளது.

யாழ்.மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் 1980 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்.மாவட்டத்தில் கால்ப்பந்தாட்டப் போட்டிகள் மற்றும் அஞ்சல் ஓட்ட காணிவேல் விழா ஆகியவற்றினை நடத்தி வந்தது.

தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தச் சங்கம் கைவிடப்பட்டது. 

இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு முதல் மீண்டும் யாழ்.மாவட்ட பாடசாலைகள் சங்கம் ஆரம்பிக்கத் தொடங்கியதுடன், அதன் தலைவராக மானிப்பாய் இந்து கல்லூரியின் அதிபர் சம்பந்தசரணாலயம் சிவநேஸ்வரன் நியமிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை நடத்தியிருந்தது. அந்தப் போட்டியில் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனாகியிருந்தது.

அந்த வகையில் எதிர்வரும் 17 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும், தவிர்க்க முடியாத காரணத்தினால் 2013 ஆண்டே இந்தப்போட்டி நடத்தப்படாமல் இவ்வருடம் (2014) நடத்தப்படுவதாக சங்கத் தலைவர் தெரிவித்தார்.

இம்முறை போட்டிகளில் யாழ்.மாவட்ட பாடசாலைகளிலிருந்து 15 அணிகள் பங்குபற்றவிருப்பதாகவும், அதில் 14 அணிகள் முதல் சுற்றில் மோதவுள்ளதுடன், கடந்த முறை சம்பியனாகிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 'பை' அடிப்படையில் அடுத்த சுற்றிலிருந்து போட்டிகளிலிருந்து கலந்துகொள்ளும் எனத் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (17) முதற் சுற்றுப்போட்டிகள் மற்றும் காலிறுதிப் போட்டிகள் இடம்பெறும். தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை (20) அரையிறுதிப் போட்டிகள் இடம்பெற்று மறுநாள் செவ்வாய்க்கிழமை (21) இறுதிப்போட்டி நடைபெறும் என தலைவர் மேலும் தெரிவித்தார்.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி, வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரி, கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரி, இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி,  வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம், உரும்பிராய் இந்துக் கல்லூரி, அளவெட்டி அருணோதயாக் கல்லூரி ஆகிய 15 அணிகளே பங்குபற்றவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X