2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'விசித்திர நட்சந்திரக்கூட்டம்' பட்டம் முதலிடம்

Kogilavani   / 2014 ஜனவரி 15 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன, செல்வநாயகம் கபிலன்


தைத்திருநாளையொட்டி யாழ்.வல்வெட்டித்துறை வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் நடத்திய பட்டம் விடும்போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஜெயதாஸ் விஜயதாஸ் (18) என்பவரது 'விசித்;திர நட்சந்திரக்கூட்டம்'  என்ற பட்டம் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.

இதேவேளை, வல்வெட்டித்துறை குளவிகள் கலாமன்ற இளைஞர்களின் 'விண்வெளி ஒடம்' என்ற பட்டம் இரண்டாம் இடத்தினையும் 'தட்டிவான்' என்ற பட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

இப்போட்டி வல்வெட்டித்துறையில் பட்டம் கட்டும் ஆர்வலர்களுக்கு இடையில் பட்டம் விடும் போட்டியை செவ்வாய்க்கிழமை (14) வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரைத் திடலில் நடத்தியது.
மேற்படி நிலையத்தினால் வருடாவருடம் நடத்தப்பட்டு வரும் இந்த பட்டம் விடும் போட்டி இம்முறை 4 ஆவது தடவையாக நடத்தப்பட்டது.
பட்டம் கட்டும் ஆர்வம் உடையவர்கள் பல விசித்திரமான பட்டங்களைக் கட்டி போட்டிக்கு எடுத்து வந்து அதனை பறக்க விட்டும்; காட்டுவார்கள். எந்தப்பட்டம் மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும், பார்வையாளர்களைப் கவரும் விதமாக இருக்கின்றதோ அதற்கு பரிசு வழங்கப்படும்.

இம்முறை 42 போட்டியாளர்கள் இந்தப் பட்டம் விடும் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.

கடற்கன்னி, விமானம், கப்பல், பெட்டி, மனிதன், பாம்பு, கார் நட்சத்திரம், ஹெலிகெப்டர், பராந்து போன்ற பல வடிவங்களில் பட்டங்கள் அமைக்கப்பட்டு ஏற்றப்பட்டிருந்தன.

இப்பட்டப்போட்டிக்கு 4 நடுவர்கள் வல்வெட்டித்துறை வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தினால் தெரிவு  செய்யப்பட்டனர்.

இப்போட்டியில் பட்டம் பறந்த தூரம், பட்டத்தின் வடிவம், திறமை, ஆக்கம் போன்ற ஒவ்வொன்றுக்கும் 25 வீதம்படி நடுவர்களால் புள்ளிகள் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X