2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இனிங்ஸ் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி

Kogilavani   / 2014 ஜனவரி 16 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தின் 19 வயது பிரிவு – 3 அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டியொன்றில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினை எதிர்த்தாடிய சென்.ஜோன்ஸ் அணி, னிங்ஸ் மற்றும் 188 ஓட்டங்களால் வென்றது.

இப்போட்டிகள் மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்களையும் 2 நாட்களையும் கொண்டதான போட்டியாக நடைபெற்று வருகின்றன.

இதில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நேற்று (15) முதல் நடைபெற்ற போட்டியொன்றில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினை எதிர்த்து யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. இருந்தும், மோசமான துடுப்பாட்டம் மூலம் அடுத்தடுத்து இலக்குகளை இழந்து 37.3 பந்துபரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 104 ஓட்டங்களை; மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் வி.வகிகரன் 30, ஆர்.றுக்ஸ்மன் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக எம்.நிலோஜன் 3 (20), ஏ.கானாமிர்தன் 2 (24), ஜி.ஆபிரகாம் அனோஜன் 2 (17) இலக்குகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் அணித்தலைவர் பி.துவாரகசீலன் (79), மற்றும் ஏ.கானாமிர்தன் (90) ஆகியோரின் துடுப்பாட்டத்தினால் 66.3 பந்துபரிமாற்றங்களை எதிர்கொண்டு 334 ஓட்டங்களைப் பெற்று சகல இலக்குகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில், ஏ.கானாமிர்தன் 90, பி.துவாரகசீலன் 79, ஆர்.பிரிசங்கர் 56, ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி சார்பாக, எஸ்.சாரங்கள் 3 (56), கே.மதுசன் 2 (75), ஜே.கல்கோவன் 2 (35) இலக்குகளைக் கைப்பற்றினர்.

230 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி படுமோசமான துடுப்பாட்ட பரிதியினை வெளிப்படுத்தி 16 பந்துபரிமாற்றங்களை எதிர்கொண்டு வெறும் 42 ஓட்டங்களுக்குள் சகல இலக்குகளையும் இழக்க போட்டி இன்று (16) மதியத்துடன் முடிவுக்கு வந்தது. துடுப்பாட்டத்தில் எவரும் இரட்டை இலக்கினையும் அடையவில்லை.

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பாக எம்.நிலோஜன் 5 (19), ஆர்;.லோகதீஸ்வரன் 4 (09) இலக்குகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X