2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இளம் வீரர்களின் திறமைகளை அடையாளம் காணும் பயிற்சி

Kogilavani   / 2014 ஜனவரி 20 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் அனுசரணையில், இளம் வீரர்களுகளின் திறமைகளை அடையாளம் காணும் வகையிலான பயிற்சி முகாம் சனிக்கிழமை மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் நடைபெற்றது.

வவுணதீவு பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் வி.பூபாலாராஜாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன், பயிற்றுவிப்பாளர் ரி.சோமாஸ்காந்தன், கண்ணன்ன்குடா வித்தியாலய அதிபர் ரி.புலேந்திரகுமார், உடற்பயிற்சி ஆசிரியை திருமதி எஸ்.கயல்விழி, இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.சசிகுமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, 15- 20 வயது இளைஞர்கள் 50க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்ட இந்த பயிற்சியில் தடகள மெய்வல்லுனர் போட்டிகள், கபடி, வலைப்பந்தாட்டம், கால்பந்தாட்டம் உள்ளிட்ட போட்டிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

முழுநாள் பயிற்சியாக நடைபெற்ற இப்பயிற்சி முகாம் கண்ணன்குடா மகாவித்தியாலயத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X