2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திறமைமிக்க விளையாட்டு வீரர்களை இனங்கான நடவடிக்கை

Kogilavani   / 2014 ஜனவரி 23 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


இலை, மறை காயாகவுள்ள விளையாட்டு வீரர்களை இனங்காணும் வகையில் கால்டன் விளையாட்டு வலையமைப்பு  திறமைமிக்க இளைஞர்களை இனங்காணும் தனது வேலைத்திட்டத்தினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடத்தவுள்ளது.

இது தொடர்பான ஆரம்பக்கட்டக் கல்ந்துரையாடல்; புதன்கிழமை (22) பிற்பகல் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், கால்டன் விளையாட்டு வலையமைப்பின் திட்டப்பணிப்பாளர் மல்கம் பெரேரா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம், மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்.ஆர்.ரஞ்சன், செயலாளர் விவேகானந்த பிரதீபன், மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்த்தர் வி.ஈஸ்வரன், மாகாண பயிற்றுவிப்பாளர் மஞ்சுள கருணாரத்ன, மாவட்ட பயிற்றுவிப்பாளர் அன்வர் டீன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதற்கமைவாக, கால்பந்தாட்டம், கிரிக்கெட், வலைப்பந்து, கூடைப்பந்தாட்டம் போட்டிகள் ஆண்;,பெண் இருபாலாருக்கும் தனித்தனியாக நடைபெறும்.

இதில் கழக மட்டம், தனிப்பட்ட, பாடசாலை மட்டங்களிலுள்ளவர்களும் பங்குபெற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்டன் விளையாட்டு வலையமைப்பு என்பது நாடு முழுவதுமுள்ள திறமை மிக்கவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தேசிய மட்டத்தில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதை நோக்காகக் கொண்ட ஒரு வேலைத்திட்டமாகும்.

இதில் திறமைமிக்க வீர வீராங்கனைகள் ஒன்று சேர்க்கப்பட்டு விஞ்ஞான ரீதியில் அவர்களது திறமைகள் இனங்காணப்படும். இவர்கள் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு மாகாண ரீதியில் ஒன்று சேர்க்கப்பட்டு தேசியக் குழுக்களில் இணைத்துக் கொள்வதற்கான தேசிய சங்கங்களுக்கு அறிமுகம் செய்யப்படும். தேசிய ரீதியில் பயிற்சியாளர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னரே தேர்வுகள் மேற்கொள்ளப்படும்.

பயிற்றுவிப்புக்கள் மற்றும் தெரிவுகள் தேசிய பயிற்றுவிப்பாளர்களால் மேற்கொள்ளப்படும். பெப்ரவரி 06ஆம் திகதி நடைபெறவுள்ள சீ.எஸ்.என். சாதனையாளர் திறமைகளைத் தேடும் நிகழ்ச்சித்திட்டத்தில் CSN CHAPS - Talent Serch Programme) அனைவரையும் கலந்து கொள்ளுமாறு திட்ட இயக்குனர் மல்கம் பெரேரா தெரிவித்தார்.

இப்போட்டிகளில் பங்கு பெறுவதற்கான விண்ணப்பங்களை பாடசாலைகளிலும், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் பிரதேச விளையாட்டு உத்தியேகத்தர்களிடமும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நிகழ்ச்சித்திட்டம், கல்வி அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுகளின் முழுமையான ஒத்துழைப்புடன், இலங்கை கிரிக்கெட், இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை றக்பி, இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை கரப்பந்து சம்மேளனம், ஆகிய தேசிய சம்மேளனங்களின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த வேலைத்திட்டமானது, இதுவரை, பதுளை மாத்தறை, குருநாகல், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது.
இதில் பாடசாலை மாணவர்களும் பங்கு பெறும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 வயது முதல் 25 வயது வரையான இளைஞர் யுவதிகளில் இவ்விளையாட்டுக்களில்; பங்கு பெறமுடியும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X