2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டுக்கழகம் வெற்றி

Kogilavani   / 2014 ஜனவரி 27 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


கல்முனை பொலிஸ் அணியினருக்கும், நற்பிட்டிமுனை பிறைவர் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை (27) மாலை நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியில் நற்பிட்டிமுனை பிறைவர் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றுள்ளது.

பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே ஐக்கியம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு என்பவற்றை விளையாட்டினூடாக ஏற்படுத்தும் நோக்குடன் இக்கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அணிக்கு 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் நாணயச்சுழற்சியில்m வெற்றியீட்டிய பிறைவர் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை பொலிஸ் அணியினர் 10 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றனர்.

இக்கிரிக்கட் போட்டியில் 42 ஓட்டங்களால் நற்பிட்டிமுனை பிறைவர் விளையாட்டுக் கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார், நேத்ரா தொலைக்காட்சி செய்தி முகாமையாளர் சீ.பி.எம்.சியாம், கல்முனை பொலிஸ் நிலைய நிர்வாகப் பொறுப்பதிகாரி வசந்த, பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி வாஹித், லாபீர் வித்தியாலய பிரதி அதிபர் எம்.எல்.அஷ்ரப் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X