2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கண்டி அணி வெற்றி

Super User   / 2014 ஜனவரி 27 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


முதற்தர கழகங்களுக்கு இடையிலான ரக்பி போட்டித் தொடரில் கண்டி அணி 46-11 என்ற புள்ளி வித்தியாசத்தில் அப்கன்றி லயன்ஸ் அணியை வென்றது.

கண்டி நித்தவலை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் இடைவேளையின் பொது 25-11 என்ற புள்ள வித்தியாசத்தில் கண்டி அணி முன்னிலை வகித்தது.

ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை கண்டி அணியே முழுக்கட்டுப்பாட்டையும் வைத்திருந்தது. இப்போட்டியில் கண்டி அணி மொத்தம் 6 ட்ரைகளை வைத்து அதில் 5 ஐ கோலாக மாற்றியது.

மேலும் 2 பெனல்டிகள் மூலம் 46 புள்ளிகளைப் பெற்றது. மலையக பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு அணியான அப்கன்றி லயன்ஸ் அணி 2 பெனல்டி மற்றும் 1 ட்ரை மூலம் 11 புள்ளிகளை மட்டும் பெற்றுக்கொண்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X