2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இலங்கைக்கு பெருமை சேர்த்த வீரனை வரவேற்கும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஜனவரி 30 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.கே.றஹ்மத்துல்லா


இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற 12 நாடுகள் பங்கு பெறும் விளையாட்டுப் போட்டியில் 4 100 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை சார்பாக சென்று தங்கப்பதக்கம் வென்ற பொத்துவில் ஏ.எல்.எம்.அஸ்ரபை வரவேற்று கௌரவமளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை(01) பொத்துவிலில் இடம்பெறவுள்ளது.

பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.அப்துல் வாஸித் தலைமையில், பொத்துவில் பிரதேச அனைத்து விளையாட்டுக்கழகங்களின் சம்மேளனம், பொது அமைப்புக்கள்; என்பன ஒன்றிணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன.

வெற்றி குறித்து அஷ்ரப்பை தொடர்புகொண்டு கேட்டபோது, 

'இலங்கைக்காக சர்வதேசத்தில் பதக்கம் ஒன்றை பெறவேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவு நனவாகியுள்ளது. அத்துடன் எமது வெற்றிக்கு பங்களிப்புச்செய்த ஒவ்வொருவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கும் நன்றி இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துகொள்கின்றேன்' என தொலைபேசியில் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X