-குணசேகரன் சுரேன்
கிளிநொச்சி, உருத்திரபுரம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 20 வயதுப்பிரிவு பாடசாலை கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை நாளை (01) முதல் உருத்திரபுரம் வித்தியாலய மைதானத்தில் நடாத்தவுள்ளதாக பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 17 பாடசாலை அணிகள் பங்குபற்றவுள்ள இச்சுற்றுப்போட்டியின் போட்டிகள் அனைத்தும் விலகல் முறையில் நடைபெற்று இறுதிப்போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இறுதிப்போட்டி நிகழ்வுகளில், பிரதம அதிதியாக வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் கலந்துகொள்ளவுள்ளார்.
உருத்திரபுரம் பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது இவ்வருடம் முதன்முறையான நடாத்தப்படவுள்ளதுடன், தொடர்ந்தும் வருடா வருடம் நடத்தப்படும் எனப் பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.