2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கரம் ஒற்றையர் ஆட்டத்தில் எம்.சோபானந் சம்பியனாகினார்

Kogilavani   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

நல்லூர் பிரதேச இளைஞர் கழகங்களின் ஆண்களுக்கான கரம் (சுண்டலாட்டம்) ஒற்றையர் ஆட்டத்தில் வண்ணை ஸ்ரீ காமாட்சியம்பாள் இளைஞர் கழக அணி வீரர் எம்.சோபானந் 29:11 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனாகினார்.

கொக்குவில் மத்திய சனசமூக நிலையத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற இந்த ஒற்றையர்களுக்கான ஆட்டத்தின் இறுதியாட்டத்தில் வண்ணை ஸ்ரீ காமாட்சியம்பாள் இளைஞர் கழக அணி வீரர் எம்.சோபானந்தை எதிர்த்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இளைஞர் கழக வீரன் எஸ்.டிணேஸ்குமார் விளையாடினார்.

இருவரும் சளைக்காமல் விளையாடியமையினால் 11 சுற்றுக்கள் வரையும் இந்த ஆட்டம் நீடித்தது.

முதல் நான்கு சுற்றுக்களை தொடர்ந்து வென்ற டினேஸ்குமார் 9 புள்ளிகளுடன் முன்னிலையில் காணப்பட்டார். எனினும் 5 ஆவது சுற்றில் சோபானந் ஒரே தடவையில் 7 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டார்.

இருந்தும், 6, 7 ஆவது சுற்றுக்களை டினேஸ்குமார் கைப்பற்றி இரண்டு சுற்றுக்களிலும் இரண்டு புள்ளிகளைப் பெற்றார்.

இறுதி தருணங்களில் அபாரமாக விளையாடிய சோபானந் தொடர்ந்து வந்த நான்கு சுற்றுக்களையும் வெற்றிபெற்றதுடன், 22 புள்ளிகளையும் பெற்றார்.

இறுதியில் சோபானந் 29:11 என்ற புள்ளிகள் அடிப்படையில் டினேஸ்குமாரினை வீழ்த்திச் சம்பியனாகினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X