2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கரம் போட்டியில் கலை பீடம் சம்பியன்

Super User   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


தென்கிழக்கு பல்கலைக்கழக உடற் பயிற்சி பிரிவினரால் பீடங்களுக்கு இடையே நடத்தப்பட்ட கரம் சுற்றுப் போட்டியில் (தனி நபர் கலை பீடம் 18 புள்ளிகளை பெற்று சம்பியனாகியது.

பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாக பொழுதுபோக்கு மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்த சுற்றுப் போட்டியில் ஐந்து பீடங்களையும் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 30 சிறந்த வீரர்கள் பங்குபற்றினர்.

இந்த சற்றுப் போட்டியில் இரண்டாமிடத்தை 13 புள்ளிகளைப் பெற்று இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழி பீடமும், மூன்றாமிடத்தை 12 புள்ளிகளைப் பெற்று முகாமைத்துவ வர்த்தக பீடமும் தட்டிக்கொண்டன.

உடற் கல்லிப் பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எல்.ஏ.தாஹிர் தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் உடற் கல்விப் பிரிவின் தலைவர் கே.எம்.முபாறக், மாணவர்கள் பேரவையின் நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.ஏ.எம். சமீம், கலாநிதி பீ. இளங்கோ, கலாநிதி ஏ.எல்.எம்.றியாழ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிவைத்தனர்.

இப்போட்டிகள் யாவும் உடற் கல்வி பரிவின் பொறுப்பதிகாரி எம்.எல்.ஏ.தாஹிர் தலைமையில் பிரிவின் போதனாசிரியர்கள் எஸ்.எல்.பி.ஆஸாத், ஐ.எம்.கடாபி ஆகியோரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X