2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மட்டுவில் ஐங்கரன் விளையாட்டு கழக அணி சம்பியன்

Super User   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்

யாழ். சாவகச்சேரி ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்தினை கொண்டாடும் முகமாக நடத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுத்தொடரில் ஐங்கரன் விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது.

ஸ்ரீ முருகன் விளையாட்டு கழக மைதானத்தில் மின்னொளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில், மீசாலை சீமா விளையாட்டு கழகத்தினை எதிர்த்து மட்டுவில் ஐங்கரன் விளையாட்டு கழகம் மோதியது. மட்டுவில் ஐங்கரன் விளையாட்டு கழகம் முதல் சுற்றினை 25:20 என்ற அடிப்படையிலும் இரண்டாம் சுற்றினை 25:16 என்ற அடிப்படையிலும் கைப்பற்றியது.

ருந்தும் மூன்றாவது சுற்றினை மீசாலை சீமா விளையாட்டு கழக அணி 25:23 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது. எனினும், ஐங்கரன் விளையாட்டு கழக அணி நான்காவது சுற்றினை 27:25 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று சம்பியனாகியது. இறுதிப் போட்டியின் சிறந்த வீரர்களாக சீமா அணியின் அருட்கரனும் ஐங்கரன் அணியின் வினோதனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்த போட்டியின் பரிசு வழங்கல் நிகழ்வில் சாவகச்சேரி நகர பிதா இ.தேவசகாயம்பிள்ளை, சாவகச்சேரி பிரதேச இராணுவ அதிகாரி மேஐர் பிரசன்ன, சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.பி.டி பொன்சேகா, சாவகச்சேரி பிரதேச செயலகத்தின்  விளையாட்டு அதிகாரி பி.சக்திவேல், வண. பிதா ஜோசப் பிரான்சிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.'





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X