2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விளையாட்டுத்துறையில் அபிவிருத்தியை மேற்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு விளையாட்டுத்துறையின் அபிவிருத்தியை மேற்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, 15பேர் அடங்கிய மாவட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்திக் குழு, 7பேர் அடங்கிய மாவட்ட மட்ட விளையாட்டு ஒழுக்காற்றுக் குழு என்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 

இக்கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர் செல்லமுத்து ஸ்ரீநிவாசன், மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி செ.சதானந்தன், விளையாட்டுத்துறை அமைச்சின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இ.அனுராகாந்தன், கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலகங்களின் விளையாட்டுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்,

'2014 ஆம் ஆண்டு தேசியமட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு கிளிநொச்சி மாவட்ட வீர,வீரங்கானைகளை தயார் செய்யும் நோக்குடனும், அவர்களுக்கான பயிற்சிகளையும் போசாக்கு உணவு வகைகளையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இவ் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.

மாவட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்தி குழுவினர் விளையாட்டுத்துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், இவர்கள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் நிதிசேகரிக்கும் பணியில் விரைவில் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன், மாவட்ட மட்ட விளையாட்டு ஒழுக்காற்று குழு விளையாட்டுத்துறையில் ஏற்படும் பிரச்சனைகளை இனங்கண்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் இயங்கவுள்ளது' என்று தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X