2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாரம்பரிய விளையாட்டு விழா

Kogilavani   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எஸ்.எம்.முஜாஹித்


மத்தியமுகாம் கிறீன்லைற் விளையாட்டுக் கழகத்தின் 38ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய விளையாட்டு விழா வியாழக்கிழமை (20) மத்தியமுகாம் பொது மைதானத்தில் கிறீன்லைற் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் கோ.சாந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், நாவிதன்வெளி பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.சுதன், மத்தியமுகாம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பி.பி.ஆர்.ரோகித்த ஜயரத்தின, மத்தியமுகாம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் கே.வசந்தகுமார், கல்முனை பிரதம தபால் அலுவலகத்தின் தபால் அதிபர் இ.குருநாதன், கண்ணகி வித்தியாலய அதிபர் ச.செல்வசிகாமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மரதன் ஒட்டம், முட்டி உடைத்தல், முதியோர் ஒட்டம், முட்டை மாற்றுதல், பலுனூதி உடைத்தல் கயிறு இழுத்தல், யானக்கு கண்வைத்தல், சங்கீத கதிரை, கிரிக்கட் சுற்றுப் போட்டி போன்ற பல பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது.

இதன்போது நாவிதன்வெளி பிரதேச செயலாளரின்  சேவையைப் பாராட்டி கிறீன்லைற் விளையாட்டுக் கழகத்தினால் பொனனாடை போர்த்தி வாழ்த்துப்பா மற்றும் நினைவு சின்னமும் வழங்கி கௌரவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X